/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கையன்புதுார் சிறப்பு பெறுமா?
/
சிங்கையன்புதுார் சிறப்பு பெறுமா?
ADDED : நவ 05, 2025 08:06 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் ரோடு, போர்வெல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ரோடு, பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இவ்வழியாக செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இப்பகுதியில், 5 போர்வெல்கள் உள்ளன. இதில், மூன்று போர்வெல்கள் முறையான பராமரிப்பு இல்லை. இதில், ஒன்று சேதமடைந்த ரோட்டின் ஓரத்தில் இருக்கிறது. போர்வெல் பழுது சரி செய்வதில் சிக்கல் ஏற்படும்.
போர்வெல்லுக்கு எதிரே ஊராட்சி பொது கிணறு உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் நிறைந்து இருந்தாலும், பயன்படுத்தாமல் இருப்பதால், கிணற்றை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
கிணற்றுநீரை மக்கள் பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய வேண்டும். மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். கிணற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு கம்பி வலை அமைக்க வேண்டும்.
மேலும், கிணறு அருகாமையில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தில், பாசனத்துக்கு பயன்படுத்தக்கூடிய கிணறு உள்ளது. இதன் அருகில் எந்த தடுப்பும் இல்லை. இதனால், இவ்வழித்தடத்தில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, தனியார் கிணறு அருகே ரோட்டோரம் தடுப்பு அமைத்து, ரோட்டையும் சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

