/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? விரக்தியில் தவிக்கும் கேங்மேன்கள்
/
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? விரக்தியில் தவிக்கும் கேங்மேன்கள்
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? விரக்தியில் தவிக்கும் கேங்மேன்கள்
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? விரக்தியில் தவிக்கும் கேங்மேன்கள்
ADDED : நவ 15, 2024 10:34 PM
கோவை; கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மின்வாரியத்தில், கோவை மாநகர், வடக்கு, தெற்கு, திருப்பூர், பல்லடம், உடுமலை, நீலகிரிஎன ஏழு வட்டங்கள் செயல்படுகின்றன. மண்டலத்தில், 2,851 கேங்கேன்கள் பணிபுரிகின்றனர். இதில், 2,000த்துக்கும் மேற்பட்டோர், ஊர் மாறுதலுக்கு விண்ணப்பித்தும், 200 பேருக்கு மட்டும் தான் மாறுதல் உத்தரவு வந்திருக்கிறது. இரண்டு மாதங்கள் கடந்தும், வடக்கு வட்டத்தில் இருக்கிற ஒரு சிலருக்கு மட்டும் தான், மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது, மற்ற வட்டங்களில் இருக்கக் கூடிய கேங்மேன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் யுவராஜ் கூறியதாவது:
பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின், தலைமை பொறியாளர் பணியமைப்பு, 10 சதவீதம் பணியிட மாறுதல் வழங்கி உள்ளார். ஆனால், இன்னும் பணி விடுவிப்பு செய்யவில்லை.கோவை வடக்கு வட்டத்தில் சில பணியாளர்களை மட்டும் பணி விடுவிப்பு செய்யப்பட்டு, மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது, கேங்மேன்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது. எனவே, பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு உடனடியாக பணி விடுவிப்பு செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

