/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு! கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முடிவு
/
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு! கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முடிவு
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு! கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முடிவு
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு! கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முடிவு
ADDED : பிப் 07, 2024 01:10 AM
பொள்ளாச்சி, பிப். 7-
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், மனோஜ் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த, 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாய் எனவும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 8,310 ரூபாய் என அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு நாள் வித்தியாசத்தில் ஒரே கல்வி தகுதி, ஒரே பணிக்கு இருவேறு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதால், 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.கடந்த, 14 ஆண்டுகளாக இந்த ஏற்றத்தாழ்வுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், இந்த ஊதிய முரண்பாட்டை களையக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தலின் போது, இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 311வது வாக்குறுதியாக அறிவித்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றாதலால் கடந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது, முதல்வர் தலையிட்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, 311வது வாக்குறுதியை செயல்படுத்த மூன்று நபர் குழு அமைப்பதாக தெரிவித்தார்.
அதன்பின், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினோம்.
அந்தக்குழு அமைத்து, எட்டு மாதங்களாகியும், எந்தத்தீர்வும் ஏற்படாததால், கடந்த அக்., மாதத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும், பள்ளி கல்வித்துறை வளாகத்தில் எட்டு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'மூன்று மாதத்தில் பிரச்னைகள் தீர்க்கப்படும்,' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் அறிவித்து நான்கு மாதங்களாகியும் எந்த பணிகளும் நடைபெறாத காரணத்தினால், மீண்டும் போராட்டத்தை தொடங்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, வரும், 12ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவோம். அதன்பின், பள்ளி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

