/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாரிசு அரசியலை தாங்க இதய பலம் வேண்டும்'
/
'வாரிசு அரசியலை தாங்க இதய பலம் வேண்டும்'
ADDED : செப் 30, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை ரேஸ்கோர்ஸில் உலக இதய தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை, ரோட்டரி கிளப் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் அவர், ''இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை சூழலில் இதய நோய் காரணமாக பலரும் உயிரிழக்கின்றனர்.
''இதய பாதிப்புகள் குறித்து குழந்தைகளுக்கு, எடுத்துரைக்க வேண்டி கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழக அரசியலில் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால், இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

