/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 28ல் நடக்கிறது 'வியோம்' இசை நிகழ்ச்சி
/
வரும் 28ல் நடக்கிறது 'வியோம்' இசை நிகழ்ச்சி
ADDED : டிச 24, 2025 05:02 AM
கோவை: சிவாஞ்சலி டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 'வியோம்' எனும் இசை நிகழ்ச்சி வரும், 28ம் தேதி சரவணம்பட்டி, குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
சிவாஞ்சலி டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ் இணை செயலாளர்கள் காயத்திரி மற்றும் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
'வியோம்' என்ற சொல்லுக்கு ஆகாயம் என்று பொருள். நான்காம் முறையாக நடக்கும் இந்நிகழ்ச்சியில், பாடகர்கள், வீணை, வயலின், கிடார், புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள், தாள வாத்தியங்கள் இடம்பெறுகின்றன. 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுக்கு குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கவில்லை. பார்வையாளர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கலாம்.
நுழைவு பாஸ்களை, வடவள்ளியில் உள்ள சிவாஞ்சலி டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ், அன்னலட்சுமி உணவக கிளைகள்(ரேஸ்கோர்ஸ், அரசு கலைக்கல்லுாரி ரோடு), டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ் இணையதளம் வாயிலாக, பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

