/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணின் பெருங்குடலில் கட்டி அகற்றிய வி.ஜி.எம்., டாக்டர்கள்
/
பெண்ணின் பெருங்குடலில் கட்டி அகற்றிய வி.ஜி.எம்., டாக்டர்கள்
பெண்ணின் பெருங்குடலில் கட்டி அகற்றிய வி.ஜி.எம்., டாக்டர்கள்
பெண்ணின் பெருங்குடலில் கட்டி அகற்றிய வி.ஜி.எம்., டாக்டர்கள்
ADDED : ஏப் 09, 2025 06:53 AM

கோவை; கோவையை சேர்ந்த, 29 வயது பெண்ணுக்கு, வயிற்றில் அதிக வலி இருந்தது. கோவை - திருச்சி ரோடு வி.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவரது குறுக்கு குடல் பகுதியில், பெரிய பாலிப் கட்டிகள் இருப்பதை கண்டறிந்து அகற்றினர்.
மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறியதாவது:
இந்தியாவில், பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குடலின் உட்பரப்பில் வளரக்கூடிய பாலிப்கள் வயதுக்கேற்ப அதிகரிக்கின்றன. 50 வயதுக்குள், 25 - 30 சதவீத நபர்களுக்கு பாலிப் கட்டிகள் உருவாகும்.
மரபணு காரணிகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, மற்றும் நீண்டகால அழற்சி ஆகியவை முக்கிய காரணம். சில வகை பாலிப்கள், குடல் புற்று நோயாக மாறலாம்.
இங்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் குறுக்கு குடல் பகுதியில், 8 செ.மீ., அளவிலான பாலிப் கட்டி இருந்தது. எண்டோஸ்கோபி முறையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. ரத்தக்கசிவு தவிர்க்கப்பட்டது. விரைந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையின் எண்டோஸ்கோபி குழு தலைவர் டாக்டர்கள் வம்சி மூர்த்தி, மதரா பிரசாத் சுமன், மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அகற்றப்பட்ட கட்டி, உலகளவில் மூன்றாவது பெரிய பாலிப் கட்டி. இந்தியாவில் இது முதல் முறை.
இவ்வாறு, அவர் கூறினார்.

