sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காய்கறி வரத்து குறையும்; விலை உயரும்: வியாபாரிகள் 'அலர்ட்'

/

 காய்கறி வரத்து குறையும்; விலை உயரும்: வியாபாரிகள் 'அலர்ட்'

 காய்கறி வரத்து குறையும்; விலை உயரும்: வியாபாரிகள் 'அலர்ட்'

 காய்கறி வரத்து குறையும்; விலை உயரும்: வியாபாரிகள் 'அலர்ட்'


ADDED : டிச 16, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு இனி வரும் நாட்களில் மலை காய்கறி விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது.

தினமும் சுமார் 3 ஆயிரம் மூட்டை கேரட்டுகள், 2 ஆயிரம் மூட்டை பீன்ஸ் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறி, வரத்து குறைய வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'உறைபனியால் பீன்ஸ் விளைச்சல் பாதிப்படையும். அதே போல் கேரட் அறுவடை செய்வதில் சுணக்கம் ஏற்படும். விவசாய கூலி ஆட்கள் வேலைக்கு வருவதில் சிக்கல் நிலவும். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் கேரட், பீன்ஸ் வரத்து குறையும்.

இன்று(நேற்று) வரத்து பெரிதாக பாதிக்கவில்லை என்றாலும், 75 வண்டிகள் லோடு வர வேண்டிய இடத்தில் 65 வண்டிகள் வருகின்றன. ஆனாலும், விலையில் பெரிய மாற்றம் இல்லை. கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. வரத்து குறைந்தால் விலை உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

----

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us