/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை ஜோர்
/
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை ஜோர்
ADDED : டிச 23, 2025 05:18 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ் விற்பனை ஜோராக நடக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், மூட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி வருகிறது. இங்கு வரும் மலைக்காய்கறி 50 சதவீதம் கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் வெஜிட்டபிள் சேம்பர் அப் காமர்ஸ் செயலாளர் ஹக்கீம் கூறியதாவது:
கேரட் ஒரு கிலோ ரூ.25 முதல் 47 வரையும், பீன்ஸ் ரூ.40 முதல் 45 வரையும், பீட்ரூட் ரூ.20 முதல் 35 வரையும், முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை ஆனது. காய்கறி விலையில் மாற்றம் பெரிதாக இல்லை. வீழ்ச்சி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

