/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதித்துறை காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
/
நீதித்துறை காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2025 07:55 AM
-- நமது நிருபர் -:
நீதித்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என, திருப்பூரில் நடந்த அகில இந்திய வக்கீல்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட, ஐந்தாவது மாநாடு, வெள்ளியங்காட்டில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்டத் துணை தலைவர் கண்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல் ஸ்ரீநிதி வரவேற்றார்.
சங்க மாநிலச் செயலாளர் பாண்டீஸ்வரி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் மோகன் மாநாட்டு அறிக்கை வாசித்தார். இதில், இ - பைலிங் முறைக்கு உரிய முன்னேற்பாடு இன்றி, நடைமுறைப்படுத்துவதை கைவிட வேண்டும்; ஏற்கனவே உள்ள நடைமுறையை அனுமதிக்க வேண்டும். பெண் வக்கீல்கள் பேறு கால உதவித் தொகை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் சங்க மாவட்ட தலைவராக மோகன், செயலாளர் - மணவாளன்; பொருளாளர் - உதயசூரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்களாக கண்ணன், பொன்ராம், தமயந்தி; இணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், வினோத்குமார், அமர்நாத் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

