/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபராதம் கட்ட முடியல: அரசு சேவை பெற முடியல! சர்வர் 'மக்கர்'; வாகன உரிமையாளர்கள் தவிப்பு
/
அபராதம் கட்ட முடியல: அரசு சேவை பெற முடியல! சர்வர் 'மக்கர்'; வாகன உரிமையாளர்கள் தவிப்பு
அபராதம் கட்ட முடியல: அரசு சேவை பெற முடியல! சர்வர் 'மக்கர்'; வாகன உரிமையாளர்கள் தவிப்பு
அபராதம் கட்ட முடியல: அரசு சேவை பெற முடியல! சர்வர் 'மக்கர்'; வாகன உரிமையாளர்கள் தவிப்பு
ADDED : டிச 10, 2024 11:43 PM
அன்னுார்; பல்வேறு சேவைகள் பெறுவதற்காக காவல்துறை விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல், 15 நாட்களாக வாகன உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் உரிமை மாற்றம் செய்தல், வாகன பதிவு புதுப்பித்தல், அடமான கடன் பெறுதல் அல்லது அடமான கடனை நீக்குதல் ஆகிய சேவைகளுக்கு ஆன்லைனில் தொடர்பு கொள்ளும்போது, போலீசார் விதித்த அபராதத்தை செலுத்திய பிறகு இந்த சேவைகளை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், கடந்த 15 நாட்களாக காவல்துறையின் சர்வர் செயல்படுவதில்லை. முடங்கி கிடக்கிறது. இதனால் அபராதத்தை செலுத்த முடியாமல் கோவை புறநகர் பகுதியைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவல்துறை விதித்த அபராதத்தை செலுத்த முடியவில்லை. இதனால் வாகன உரிமையாளர்கள் எந்த சேவையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற முடியாமல் உள்ளனர். இது மட்டுமல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின், 'வாகன்' இணையசேவையும் இரண்டு வாரங்களாக மிக மெதுவாக செயல்படுகிறது.
'ஒரு நாள் முழுக்க கணினியில் காத்திருந்த பிறகே அதில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் செலுத்த முடிகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பல்வேறு சேவைகள் செய்ய முடியாமல் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்தம்பித்து உள்ளன. அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

