/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு சாலை விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி
/
இரு சாலை விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி
ADDED : நவ 04, 2025 09:11 PM
கோவை: சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகம்மாள், 75. கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். ரோட்டை கடக்க முற்பட்ட போது அவ்வழியாக அதிக வேகத்தில் வந்த கிரேன் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் கிரேனின் முன்சக்கரம், நாகம்மாள் மீது ஏறி, இறங்கியது. படுகாயமடைந்த நாகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கிரேன் டிரைவர் சேலம் எடப்பாடியை சேர்ந்த விக்னேஷ், 25 என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
* சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 54. நேற்று முன்தினம் விநாயகபுரம் குமரன் வீதியில் தனது மொபட் உடன் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரக்கு லாரி டிரைவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நடராஜ், 46 என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

