/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது
/
கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது
ADDED : டிச 24, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: கெம்பனூர் ரோடு, அட்டுக்கல் பிரிவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொண்டாமுத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த, வடமாநிலத்தவர் இருவரை பிடித்தனர்.
இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
தொண்டாமுத்தூர் போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த அபஜ் உதீன்,39 மற்றும் மொய்னுல் ஹூக்,33 ஆகிய அவ்விருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 1.1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

