/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மளிகை வியாபாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி
/
மளிகை வியாபாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி
ADDED : டிச 17, 2025 05:03 AM
கோவை: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கோவை அரிசி, எண்ணெய் வியாபாரிகள், மளிகை வியாபாரிகளுக்கு உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவுகளில் கலப்படம் , உணவு பொருட்கள் கையாளும் முறை, மருத்துவச்சான்று, உணவு கழிவு மேலாண்மை, பூச்சி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தவிர, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்று புதிதாக எடுத்தல், புதுப்பிப்பு, உரிமம் பதிவு உள்ளிட்டவை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சார்பில், உடனடியாக பெறுவதற்கான விண்ணப்ப செயல்பாடுகளும் நடைபெறும் என்பதால், மளிகை வியாபாரிகள், அரிசி, எண்ணெய் வியாபாரிகள் பங்கேற்று, பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''தமிழக வியாபாரிகள் சங்கம், கோவை மார்க்கெட் வியாபாரிகள், அரிசி மற்றும் எண்ணெய் வியாபாரிகள் சங்கம் தரப்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இப்பயிற்சி மற்றும் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும். நாளை(இன்று) மாலை, 4:30 மணியளவில் ராஜவீதி ராமர் கோயில் திருமண மண்டபத்தில், கூட்டம் நடைபெறும்,'' என்றார்.

