/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூம்புகாரில் பார்க்கலாம் பொம்மை கண்காட்சி
/
பூம்புகாரில் பார்க்கலாம் பொம்மை கண்காட்சி
ADDED : செப் 07, 2025 06:45 AM

கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை அங்காடியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
தசாவதாரம், தர்பார், விநாயகர், அஷ்டலட்சுமி, மும்மூர்த்தி, கிரிவலம், கருடசேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர்தசரா. எலிநடனம், வாசுதேவர், கோபியர், வளைகாப்பு, தாயம், மாமல்லபுரம், பள்ளிக்கூடம், சோட்டாபீம்,கெம்பேகவுடா, ஜல்லிகட்டு மற்றும் வெட்டிவேர் விநாயகர், தஞ்சாவூர் பொம்மை, துலாபாரம், உழவர் சந்தை செட் என, நுாற்றுக்கணக்கான கொலு பெம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வீட்டில் கொலு வைப்பவர்கள் தேவையான வெரைட்டியான பொம்மை செட்கள் உள்ளன.
கண்காட்சியில் வாங்கும் பொம்மைகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நவ., 4 வரை தினமும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் என்கிறார் மேலாளர் மாலதி.