/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
/
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
ADDED : டிச 23, 2025 07:23 AM

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞரின் பைக் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது.
மதுரை மாவட்டம், விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெபர்சன்,22. இவர், கேரள மாநிலம் அதிரப்பள்ளிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு வால்பாறை நகருக்கு வந்தார்.
அப்போது, நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பத்து லிட்டர் பெட்ரோல் நிரம்பிய பின், புறப்பட்டு சிறிது துாரம் செல்வதற்குள் பைக்கின் பின்பகுதியில் திடீரென சப்தம் ஏற்பட்டதால் பைக்கை நிறுத்தி இறங்கினார்.
அடுத்த சில நொடிகளில் பைக் தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, தீ பற்றி எரிந்த பைக் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் வால்பாறை நகரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

