/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 07, 2025 06:49 AM
அபிஷேக விழா கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 647வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர் பட்டீசுவரர் கோவில் பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை 9.30 மணிக்கு அபிஷேகம், வேல் பூஜை நடக்கிறது.
ஆன்மிக ஐயம் தெளிதல் மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வாராந்திரசத்சங்கம் நடக்கிறது. மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை, 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில் சுவாமி சங்கரானந்தா உரையாற்றுகிறார்.
சத்ய சாயி கோடி அர்ச்ச்னை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை, ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு பாராயணமும், மாலை 5.30க்கு சாய்பஜன் சத்சங்கமும் நடக்கிறது.
நாட்டியாஞ்சலி கோவை ரோட்டரி கிளப் மெட்ரோபாலிஸ் சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மாலை 6.15 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்கள், பரதநாட்டியம், கதக் போன்ற கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர்.
சைக்கிள் பேரணி கோவை மாவட்ட சைக்கிள்அசோசியேசன் சார்பில், 'போதையில்லா கோவை' விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, ரேஸ்கோர்ஸ் சக்தி சுகர்ஸ் வளாகத்தில் துவங்குகிறது. காலை 5.30 மணிக்கு நடக்கும் பேரணியில், 15 கி.மீ., 50 கி.மீ., என இரு பிரிவுகளில் சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஆண்டு விழா ஆர்.எஸ்.புரம், பாரதிய வித்யா பவன் 'பேக்கல்டி ஆப் பைன் ஆர்ட்ஸ்' ஆண்டு விழா நடக்கிறது. பவன் வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்நிகழ்வில், இறுதியாண்டுடிப்ளமோ மாணவர்கள் கர்நாடிக் இசை நிகழ்வை நடத்துகின்றனர்.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரமம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.