/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் 3 நாள் மழை இருக்காது
/
கோவை மாவட்டத்தில் 3 நாள் மழை இருக்காது
ADDED : டிச 20, 2025 05:04 AM
வடவள்ளி: வேளாண் பல்கலை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
கோவை மாவட்டத்தில் மழையில்லா நாட்கள் தொடரும். நாளை(21ம் தேதி) வரை வானம் தெளிவாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
குளிர்ந்த காற்றின் வேகம் மணிக்கு 8 கி.மீ., முதல் 14 கி.மீ., வரை இருக்கும். வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸை விட குறைவாக இருக்கும்.
மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில், தெளிப்பு நீர் பாசனத்தை பயன்படுத்தி, பயிர்களுக்கு உறைபனியால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி வீக்க நோயை தவிர்க்க, பால் கறப்பதற்கு முன் மடியை பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலில் கழுவவும். தென்னைக்கு இரண்டாவது முறையாக உரமிட இது சிறந்த தருணம்.

