/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு பள்ளி சீருடையில் வந்த மாணவர்!
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு பள்ளி சீருடையில் வந்த மாணவர்!
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு பள்ளி சீருடையில் வந்த மாணவர்!
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு பள்ளி சீருடையில் வந்த மாணவர்!
ADDED : பிப் 05, 2024 01:24 AM

கோவை;கோவை வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு பகுதியில் அமைந்துள்ள, நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில், 1980 முதல் 1991ம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனுார் சாலையில் உள்ள, ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்து விளையாடிய, நண்பர்களை காண அனைவரும் ஒன்று கூடி வந்திருந்தனர்.
அனைவரது முகத்திலும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் காணமுடிந்தது. உருவங்கள் மாறியதால், சற்று சிரமத்துடன் அடையாளம் கண்டு, பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில், 1990ம் ஆண்டு படித்த கூடலுாரை சென்ற கார்த்தி என்ற, 50 வயது நபர் பள்ளி காலத்தில் பயன்படுத்திய சீருடை போன்று, வெள்ளை சட்டை, காக்கி அரைக்கால் டிரவுசர் அணிந்து, அரங்கிற்குள் வந்தார்.
இதை கண்ட அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். நிகழ்ச்சி முடியும் வரை, அனைவரின் பார்வையும் இவரை சுற்றியே இருந்தது. இதில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.