/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா
/
புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா
ADDED : மார் 01, 2024 01:21 AM
கோவை:கோவை வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள, காந்தி நுாற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளி புதிய கட்டட திறப்பு விழா இன்று நடக்கிறது.
இதுகுறித்து பிரிமியர் மில்ஸ் குழும இயக்குனர் கவிதா சந்திரன் கூறியதாவது:
காந்தி நுாற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என்பதை எங்கள் பணியாளர்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். அதை தொடர்ந்து, சி.எஸ்.ஆர்., செயல்பாடுகளின் கீழ், 4 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன், புதிய வகுப்பறைகள் அடங்கிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டடம், இன்று திறக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய கட்டடத்தை கோவை டி.ஐ.ஜி., சரவணசுந்தர் திறந்து வைக்கிறார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

