/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலமானார்' எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
/
'காலமானார்' எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
ADDED : டிச 24, 2025 06:47 AM
பொள்ளாச்சி: மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளிலும் சேர்த்து, காலமான வாக்காளர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் கொரோனா கால கட்டத்தில், காலமானோர் எண்ணிக்கையே அதிகம்.
கோவை மாவட்டத்தில்,தற்போது வாக்காளர் கணக்கெடுப்பின் படி, 25,74,608 பேர் மொத்த வாக்காளர்கள்.இதில் ஆண்கள், 12,43,282 பேர்;பெண்கள், 13,30,807 பேர்;திருநங்கையர், 519 பேர்உள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் மாவட்டத்திலுள்ள, பத்து சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, 1,19,489 பேர் காலமானதாக, வாக்காளர் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேட்டுப்பாளையம் -13,818, சூலுார்-10,624, கவுண்டம்பாளையம் -13,864, கோவை வடக்கு -14,543, தொண்டாமுத்துார்-9,490, கோவை தெற்கு -10,208, சிங்காநல்லுார்-16,628, கிணத்துக்கடவு -14,726, பொள்ளாச்சி-8,786, வால்பாறை-6,782 பேர் என மொத்தம், 1,19,489 பேர் காலமாகியுள்ளனர்.

