/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்தால் குப்பை அளவு குறைந்ததாம்! மறுஅளவீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : அக் 23, 2024 11:23 PM

கோவை : வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்க, மறுஅளவீடு செய்வதற்கு, மாமன்ற கூட்டத்தில் நேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளலுார் கிடங்கில் மலைக்குன்று போல் கொட்டியுள்ள பழைய குப்பை, 'பயோமைனிங்' திட்டத்தில் அழிக்கப்படுகிறது.
பேஸ்-2 திட்டத்தில், மீதமுள்ள, ஏழு லட்சத்து, 43 ஆயிரத்து, 287 மெட்ரிக் டன் பழைய குப்பையை அழிக்க, மாநகராட்சி சார்பில் ரூ.54.84 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மத்திய அரசு பங்கு - 25 சதவீதம்; மாநில அரசு பங்கு - 16 சதவீதம்; மாநகராட்சி பங்கு - 59 சதவீதம் நிதி பங்கீடு செய்து, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.
கடந்த ஏப்., மாதம் டெண்டர் கோரப்பட்டது. லோக்சபா தேர்தல் நடவடிக்கை இருந்ததால், காலநீட்டிப்பு செய்து, டெண்டர் இறுதி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எரிந்தது...குறைந்தது!
இச்சூழலில், ஏப்., 6 முதல், 17 வரை வெள்ளலுார் கிடங்கில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு, குப்பை எரிந்து தீக்கிரையானது. அதனால், குப்பை அளவு குறைந்துள்ளதாக, தீயணைப்பு துறையினர் கடிதம் வழங்கியுள்ளனர்.
வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள அனைத்து குப்பையையும் அழிக்க, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருப்பதால், மறுஅளவீடு செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, மறுஅளவீடு செய்து டெண்டர் கோர மாமன்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.