/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகள போட்டியில் தடம் பதித்த மாணவர்கள்
/
தடகள போட்டியில் தடம் பதித்த மாணவர்கள்
ADDED : டிச 10, 2024 11:48 PM

கோவை; நேரு மைதானத்தில், கேம்போர்டு சர்வதேச பள்ளியின் 15வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் தடகள விழா, 'கேம்போர்டிக்ஸ்', என்ற தலைப்பில் நடந்தது.
இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்ற சிறந்த விளையாட்டு வீராங்கனையுமான மீத்து அன்னா ஜோஸ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த தடகள போட்டிகளில், பள்ளி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பெற்றோர்களும் சில போட்டிகளில் பங்கேற்று அசத்தினர்.
அட்மிரல்ஸ் ஹவுஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. அணிவகுப்பிற்கான கோப்பையை, மார்ஷல்ஸ் ஹவுஸ் அணி கைப்பற்றியது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இறுதியாக, விளையாட்டு ஜோதியை விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஒற்றுமை மற்றும் போட்டிக்கான உறுதியின் அடையாளமாக ஏந்திச் சென்றனர்.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், நிர்வாகி பூங்கோதை அருள், முதல்வர் பூனம் சையால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

