/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூக அக்கறை கொண்டவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்!
/
சமூக அக்கறை கொண்டவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்!
சமூக அக்கறை கொண்டவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்!
சமூக அக்கறை கொண்டவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்!
ADDED : டிச 19, 2025 06:01 AM

வால்பாறை: சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும், கல்லுாரியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் கூறினார்.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரூபா வரவேற்றார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து கல்லுாரி முதல்வர் கோபி பேசியதாவது: மாணவர்கள் பொதுஇடங்களில் சுகாதாரத்தை கடைபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் சமூக அக்கறையுடன் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். வனவிலங்கு - மனித மோதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வால்பாறையின் இயற்கையை பாதுகாக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும், வனவிலங்குகளுடன் இசைந்து வாழ பழகி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டாக்டர் ராஜசேகர் பேசியதாவது:
தெருநாய் கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வன விலங்குகளை துன்புறுத்தினால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஆபத்தில் முடியும். குறிப்பாக, தெருநாயோ, வீட்டில் வளர்க்கப்படும் நாயோ கடித்தால் வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

