/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான ஹாக்கி: பாவை கல்லூரி 'வாகை'
/
மாநில அளவிலான ஹாக்கி: பாவை கல்லூரி 'வாகை'
ADDED : மார் 20, 2024 10:15 PM
கோவை : பி.பி.ஜி., கல்லுாரியில் நடந்த, மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், பாவை இன்ஜி., கல்லுாரி அணி, வெற்றி வாகை சூடியது.
பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் இன்ஜி., மாணவர்களுக்கு '6ம் ஆண்டு அலுமினி கோப்பைக்கான' மாநில அளவிலான ஹாக்கி போட்டி, சரவணம்பட்டி பி.பி.ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், 15க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிட்டன. போட்டியை, பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் தலைவர் தங்கவேலு துவக்கி வைத்தார்.
இதன் முதல் அரையிறுதிப்போட்டியில், பாவை இன்ஜி., அணி 4 - 3 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் பி.பி.ஜி., அலுமினி அணி 3 - 2 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில், பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியின் ஆரம்பம் முதல், ஆதிக்கம் செலுத்திய பாவை இன்ஜி., கல்லுாரி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில், பி.பி.ஜி., அலுமினி அணியை வீழ்த்தி, கோப்பையை தட்டிச்சென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகுமார் பரிசுகளை வழங்கினார்.

