/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான போட்டி; மூலத்துறை மாணவர் தேர்வு
/
மாநில அளவிலான போட்டி; மூலத்துறை மாணவர் தேர்வு
ADDED : டிச 01, 2024 11:46 PM
மேட்டுப்பாளையம்; தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில், சிறுமுகை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவன், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வானவில் மன்ற அறிவியல் மற்றும் கணித செயல் திட்ட போட்டி, கோவையில் நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் தேர்வு செய்த, 45 மாணவர்கள் குழுவினர், தங்கள் செயல் திட்டங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் காட்சிப்படுத்தி விளக்கினர். இதில் சிறுமுகை அருகே உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் குழு அன்பு, மெர்சில்டா, பவின் ஆகிய மூன்று மாணவர்கள், 'கட்டுமான தொழில்நுட்பத்தில் கணித கோட்பாடுகள்' என்ற ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். இந்த கட்டுரை சிறப்பிடத்தை பிடித்தது. மாணவர் குழு தலைவர் அன்பு சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
வட்டார அளவிலான கதை மற்றும் பேச்சுப் போட்டிகள் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சிறுமுகை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவன் சுதர்சன் பேச்சுப் போட்டியிலும், ஸ்ரீதேவ் கதை சொல்லும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

