/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., மாணவர்களுக்கான பூப்பந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி ஆதிக்கம்

ADDED : மார் 19, 2024 12:29 AM

கோவை;ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 6ம் ஆண்டு எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், கல்லுாரி வளாகத்தில் கடந்த, 15 முதல் 17ம் தேதி வரை நடந்தன. வாலிபால், ஹேண்ட்பால் மற்றும் பூப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர் பூப்பந்து போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அணி முதலிடம், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
மாணவியர் பிரிவில், ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடத்தையும், பி.ஏ., கல்லுாரி அணி இரண்டாமிடத்தையும், கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் முன்னாள் மாணவி நிவேதா பரிசுகளை வழங்கினார்.