/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொந்தமாக 'யூ-டியூப்' சேனல் உருவாக்க சிறப்பு பயிற்சி
/
சொந்தமாக 'யூ-டியூப்' சேனல் உருவாக்க சிறப்பு பயிற்சி
சொந்தமாக 'யூ-டியூப்' சேனல் உருவாக்க சிறப்பு பயிற்சி
சொந்தமாக 'யூ-டியூப்' சேனல் உருவாக்க சிறப்பு பயிற்சி
ADDED : மார் 12, 2024 07:41 PM
கோவை:தொழில்முனைவோர் சொந்தமாக, யூ-டியூப் சேனல் உருவாக்குதல் மற்றும் இணைய தளத்தில், யூ-டியூப் சேனலை பயன்படுத்தி, தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம் சார்பில், கோவை பாரதியார் பல்கலையில், வரும் 18 முதல், 20 வரை காலை, 9:45 முதல் மாலை, 5:45 மணி வரை, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
யூ-டியூப் சேனலை உருவாக்குவது, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக சந்தைப்படுத்துதல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகளை விளக்கும் வகையில், பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர், குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கட்டணம், 5,000 ரூபாய். சேர விரும்புவோர், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்களை, www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.

