/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் பாம்புகள் உலா; புதரை அகற்றாததால் மக்கள் அச்சம்
/
ரோட்டில் பாம்புகள் உலா; புதரை அகற்றாததால் மக்கள் அச்சம்
ரோட்டில் பாம்புகள் உலா; புதரை அகற்றாததால் மக்கள் அச்சம்
ரோட்டில் பாம்புகள் உலா; புதரை அகற்றாததால் மக்கள் அச்சம்
ADDED : டிச 16, 2025 07:16 AM

ரோட்டில் பாம்புகள் பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில், ரோட்டோரப் புதர்களில் இருந்து அதிக அளவில் பாம்புகள் வெளியே வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் நலன் கருதி ரோட்டோரத்தில் வளர்ந்திருக்கும் புதர்களை அகற்றம் செய்ய வேண்டும். இத்துடன் பாம்புகள் நடமாட்டம் இருந்தால் அதை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- டேனியல்: நிழற்கூரையில் போஸ்டர் கிணத்துக்கடவு, காட்டம்பட்டி ரோட்டில் மன்றாம்பாளையம் பகுதியில் இருக்கும் நிழற்கூரையில் அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், பஸ் ஸ்டாப் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, இங்கு ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
-- ரமேஷ்: போக்குவரத்து நெரிசல் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள 'யு டேர்ன்' பகுதியில், ரோட்டோரம் அதிகளவில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இங்குள்ள 'யு டேர்ன்' பகுதியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்.
- - சந்தோஷ்: ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், டி.கோட்டம்பட்டி அருகே தனியார் காம்ப்ளக்ஸ் முன் ரோட்டோரம் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- - பெருமாள்: நிழற்கூரை கட்டணும் பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியில் மின்கரை ரோட்டில் நிழற்கூரை இல்லாததால் அப்பகுதியில் உள்ளவர்கள் மழை மற்றும் அதிக வெயில் காலங்களில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இங்கு விரைவில் நிழற்கூரை அமைக்க வேண்டும்.
-- நடராஜன்: வடிகாலை துார்வாரணும் உடுமலை - பழநி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் நீர்நிலையில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதில், கழிவுகள், செடிகள் அகற்றப்படாததால் தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார்: கட்டட கழிவுகளை அகற்றுங்க குட்டைத்திடலில் கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, குட்டை திடலில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்பிரமணி: போக்குவரத்துக்கு இடையூறு உடுமலை - தளி ரோடு முதல்கிளை நுாலகம் எதிரில் இரவு நேர டிபன் கடைகள் போடப்படுகின்றன. பின்னர் தள்ளுவண்டிகள் அங்கேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணி: பிளக்ஸால் பாதிப்பு உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் முன் பிளக்ஸ் போர்டு வைக்கப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறுகிறது. போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா: குடிநீர் வசதி இல்லை உடுமலை பஸ் ஸ்டாண்ட் குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர். குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பழுதடைந்துள்ளது. எனவே, பயணியருக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
- சிவராஜ்: பூங்காவை பராமரிக்கணும் உடுமலை ஸ்ரீ நகரில் நகராட்சி பூங்கா பராமரிப்பின்றி பொலிவின்றி காணப்படுகிறது. அங்கு குப்பை, கூளங்கள் தேங்கியுள்ளது. இதனால், குழந்தைகள் இதில் விளையாட தயக்கம் காட்டுகின்றனர். எனவே, பூங்காவை பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்:

