/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் கட்சியினரிடம் தொடர்பு இருக்கக் கூடாது! அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
/
அரசியல் கட்சியினரிடம் தொடர்பு இருக்கக் கூடாது! அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அரசியல் கட்சியினரிடம் தொடர்பு இருக்கக் கூடாது! அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அரசியல் கட்சியினரிடம் தொடர்பு இருக்கக் கூடாது! அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 09, 2024 09:03 PM

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள, 288 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, கோவை சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.
சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அப்போது, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
மண்டல மற்றும் மண்டல துணை தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலம் எது; எத்தனை ஓட்டுச்சாவடிகள் இருக்கின்றன; அவற்றின் அமைவிடம் குறித்த முழு விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் நேரில் சென்று, அதன் தற்போதைய நிலையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வருவதற்கான சாய்வு தளம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஓட்டுப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், 'விவி பேட்' இயந்திரங்களை மண்டல தேர்தல் அலுவலர்கள் தயார்படுத்த வேண்டும். மூன்று இயந்திரங்களையும் ஒன்றோடொன்று எவ்வாறு இணைப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
'விவி பேட்' இயந்திரத்தில், 1,400 ரசீது வரும் வகையிலேயே காகித ரோல் இருக்கும். அதனால், மாதிரி ஓட்டுப்பதிவு செய்யும்போது, தேவையின்றி பதிவு செய்து, காகிதத்தை வீணாக்கக் கூடாது. மாதிரி ஓட்டு பதிவு செய்த ரசீதை வெளியே எடுத்து, பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்; குப்பை தொட்டியிலோ அல்லது கீழேயோ வீசக்கூடாது.
ஓட்டுப்பதிவு நாளில், எந்தவொரு சூழலிலும், மண்டல தேர்தல் அலுவலர் பதற்றமடையக் கூடாது. எந்தவொரு விஷயத்தையும் நிதானமாக கையாள வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானால், 'பெல்' நிறுவன இன்ஜினியர்களுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
மண்டல தேர்தல் அலுவலர்களாக பணிபுரிவோர், எந்தவொரு அரசியல் கட்சியினருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது. அது, மாற்றுக்கட்சியினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

