/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டைஸ் பூப்பந்து போட்டி: சக்தி கல்லூரி அணி முதலிடம்
/
சென்டைஸ் பூப்பந்து போட்டி: சக்தி கல்லூரி அணி முதலிடம்
சென்டைஸ் பூப்பந்து போட்டி: சக்தி கல்லூரி அணி முதலிடம்
சென்டைஸ் பூப்பந்து போட்டி: சக்தி கல்லூரி அணி முதலிடம்
ADDED : பிப் 19, 2024 01:04 AM
கோவை:இன்ஜி., மாணவியருக்கு மண்டல அளவில் நடந்த பூப்பந்து போட்டி, சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.
சென்டைஸ் (கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., ஸ்போர்ட்ஸ்) சார்பில், ஆண்டுதோறும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
13ம் ஆண்டு சென்டைஸ் விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, எஸ்.என்.எஸ்., டெக் கல்லுாரியில், பெண்களுக்கான த்ரோபால், பூப்பந்து, வாலிபால், கோ கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் பூப்பந்து இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின.
இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக்தி கல்லுாரி மாணவியர், 2 - 0 என்ற செட் கணக்கில், கே.பி.ஆர்., அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாம் முறையாக முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

