/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
/
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : மார் 16, 2024 12:01 AM

கோவை:கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில், 'மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம்' குறித்த, சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இரு நாள் கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் பேராசிரியர்கள், அமெரிக்கா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 10க்கும் மேற்பட்ட கல்லுாரி பேராசிரியர்கள் ஆராய்ச்சி தரவுகளை பதிவு செய்தனர்.
பெறப்பட்ட 3,096 தரவுகளில் இருந்து, தமிழ்நாட்டில் இருந்து 196, வெளிமாநிலங்களில் இருந்து, 258, வெளிநாடுகளில் இருந்து, 10ம் பதிவு செய்யப்பட்டதாக, கல்லுாரி தணிக்கைத்துறை தலைவர் லட்சுமணன் கூறினார்.
கனடா அர்பெட்டோ பல்கலை பேராசிரியர் குமரதேவன் புனிதகுமார், சென்னை சாய்ராம் இன்ஜி., கல்லுாரி முதல்வர் பொற்குமரன் கரந்தராஜ், வியட்நாம் டுய் டான் பல்கலை பேராசிரியர் ஆனந்த் நய்யார் பேசினர்.கல்லுாரி கல்வித்துறை டீன் சுரேஷ், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

