/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
/
அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
ADDED : ஜன 06, 2026 06:13 AM

- நிருபர் குழு -: அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த டிச. மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியது.
பள்ளிகள் திறப்புக்கு முன், பொள்ளாச்சி கல்வி மாவட்ட புத்தக இருப்பு மையமான, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் வாயிலாக புத்தகங்கள் அனுப்பப்பட்டன.
நேற்று, பள்ளிக்கு வந்த ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகளும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டுகளும் வழங்கப்பட்டன.
* உடுமலையில், நேற்று அரசுப்பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின. மூன்றாம் பருவம் துவங்கியுள்ள நிலையில், இப்பருவத்துக்கான பாடநுால்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டது.
நேற்று வகுப்புகள் துவங்கியதும், பாடநுால் மற்றும் குறிப்பேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் (பொ) காயத்ரி, மாணவர்களுக்கு விலையில்லா பாடநுால்களை வழங்கினார். சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் இன்பக்கனி, மாணவர்களுக்கு பாடநுால் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார்.
* வால்பாறையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அந்தந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.
வட்டார கல்வி அலுவலர் செல்வி கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் 79 அரசு துவக்கப்பள்ளிகளும், 14 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 1,316 மாணவர்கள் படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
வால்பாறையில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் நேற்று மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன,'' என்றார்.

