/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.13.87 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.13.87 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 18, 2024 11:13 PM

ஆனைமலை;ஆனைமலை அருகே மீனாட்சிபுரம் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், நேற்று காலை வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் இருந்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாச்சேரியை சேர்ந்த வர்கீஸ் என்பவரிடம் இருந்து, 4 லட்சம் ரூபாய், பெரும்பாவூர் ரயன்புரம் பட்டப்பள்ளி ஹவுஸ் அப்துல்கரீமிடம் இருந்து, 94,500 ரூபாய், குமாரபுரம் சிராஜிடமிருந்து, 2,79,000 ரூபாய்,
சிட்தோடில் ஹவுஸ் சுபைர் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய்; எர்ணாகுளத்தைச்சேர்ந்த மார்டின், 1,86,000 ரூபாய், ஜோயிடம் இருந்து, இரண்டு லட்சம் என மொத்தம், 12 லட்சத்து, 59 ஆயிரத்து, 500 ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
முறையான ஆவணங்களின்றி பணம் எடுத்து வரப்பட்டதையடுத்து, அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, வால்பாறை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதே போன்று பறக்கும் படை குழுவினர், அம்பராம்பாளையம் சுங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சேலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரிடம் இருந்து, 1,28,000 ரூபாய் பணம் எவ்வித ஆவணங்களுமின்றி வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த குழுவினர், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

