/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேர் வாடல் நோய்; 796 ஹெக்டேரில் கணக்கெடுப்பு மாவட்ட கலெக்டர் தகவல்
/
வேர் வாடல் நோய்; 796 ஹெக்டேரில் கணக்கெடுப்பு மாவட்ட கலெக்டர் தகவல்
வேர் வாடல் நோய்; 796 ஹெக்டேரில் கணக்கெடுப்பு மாவட்ட கலெக்டர் தகவல்
வேர் வாடல் நோய்; 796 ஹெக்டேரில் கணக்கெடுப்பு மாவட்ட கலெக்டர் தகவல்
ADDED : மார் 11, 2024 09:35 PM
பொள்ளாச்சி;தென்னையில், கேரளா வேர் வாடல், 796 ஹெக்டேரில் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது, என மாவட்ட கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, விஞ்ஞானிகள் கொண்ட குழு கடந்த டிச., மாதம் அமைக்கப்பட்டது. அனைத்து வட்டார அலுவலர்கள் வாயிலாக, தென்னை வாடல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, கடந்த ஜன., மாதம், பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோய் குறித்து வயலாய்வு நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில், கோவை கலெக்டர், பொள்ளாச்சி எம்.பி., முன்னிலையில், தோட்டக்கலை துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, நோய் தாக்குதல் கணக்கெடுப்பினை, பொள்ளாச்சி பகுதி கல்லுாரி மற்றும் வேளாண் பல்கலை மாணவர்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கல்லுாரி மாணவர்களை கொண்டு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில் கடந்த மாதம், 10 முதல், 13ம் தேதி வரை, 1,330 ஹெக்டேரில் கணக்கெடுக்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை இயக்குனர் கடந்த மாதம், 24 மற்றும், 25ம் தேதிகளில், வேர் வாடல் நோய் தாக்கத்தை கள ஆய்வு செய்து அறிவுறுத்தியதன் படி, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை கள அலுவலர்களை ஒருங்கிணைத்து, வட்டாரத்துக்கு ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை வேர் வாடல் நோய் இருப்பதாக, 796 ெஹக்டேரில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய ஆய்வில், முழு ஆய்வு செய்து கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஒரு குழுவுக்கு, ஐந்து பேர் வீதம், ஒரு குழுவுக்கு, 100 விவசாயிகள் என்ற அடிப்படையில், 213 குழுவாக வேர் வாடல் நோய்க்கான முழுமையான காரணிகள் ஆராயப்பட்டுள்ளது.
நோயில் இருந்து மரங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.வேர்வாடல் நோய், பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணியிரி வாயிலாக உண்டாகிறது.
கண்ணாடி இறக்கை பூச்சி மற்றம் தத்துப்பூச்சி போன்ற சாறு உருஞ்சும் பூச்சிகள் வாயிலாக ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றது.நோய் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தோட்டக்கலைத்துறை, வேளாண் பல்கலை மற்றும் காசர்கோடு மத்திய தோட்டக்கலை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வழங்கிய பரிந்துரைகள், தென்னை விவசாயிகளுக்கு பகிரப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை வாயிலாக தொடர் கள ஆய்வுகள் பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

