/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோபோ தயாரிக்கும் போட்டி; பண்ணாரி அம்மன் முதலிடம்
/
ரோபோ தயாரிக்கும் போட்டி; பண்ணாரி அம்மன் முதலிடம்
ADDED : ஏப் 04, 2025 11:41 PM

கோவை; ஐ.இ.இ.இ., கடல்சார் பொறியியல் சங்கம் மற்றும் கடல்சார் தொழில்நுட்ப சங்கம், சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, 'அக்வா விஷன் சவால்' என்ற தலைப்பில், அதிநவீன ரோபோ தயாரிப்பு போட்டியை நடத்தின.
இந்தியாவின் முதல் தேசிய அளவிலான, தானியங்கி முறையில் நீருக்கடியில் செல்லும் இந்த வாகனப் போட்டியில், நாடு முழுவதிலிருந்தும்16க்கும் மேற்பட்ட பல்கலையைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
மாணவர்கள் நீருக்கடியில் செல்லக்கூடிய, அதிநவீன ரோபோக்களை காட்சிப்படுத்தினர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், பண்ணாரி அம்மன் கல்லுாரியின் மாணவர் அணி, முதல் இடத்தை பெற்று வெற்றி கோப்பையையும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, உயர் துல்லியமிக்கசென்சார் கருவியையும் வென்றனர்.
நீருக்கடியில் பார்வை சார்ந்த ரோபோவிற்காக, சிறப்பு விருதையும் பெற்றனர். சார்லஸ் ஜூட் ராகவேந்திரன், விஜய், தருண் பிரசாத், வெங்கடேஷ், சிவசுப்பிரமணியம், முகேஷ், கோகுல், சரவணன் ஆகியோர் அடங்கிய மாணவர் குழுவை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

