/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமாதான் திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை
/
சமாதான் திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை
ADDED : மார் 28, 2025 03:06 AM
கோவை: ஜி.எஸ்.டி., ஆணையரகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சமாதான் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, தொழில் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரகத்தில் மாதம் தோறும், தொழில் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இம்மாதம் நடந்த கூட்டத்தில், சமாதான் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆண்டு இறுதி என்பதால், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும்.
மேலும், குறு, சிறு நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகையும் நிலுவையில் இருக்கும். அது கிடைப்பதும் கடினம்.
எனவே, சமாதான் திட்ட அறிவிப்பை, கால நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி., சட்டப்பிரிவு 128 'ஏ' வில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2020-21, 2021-22, 2022-23ம் நிதியாண்டுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, தொழில் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில், கொடிசியா துணை செயலாளர் ஜெயக்குமார், சியா தலைவர் தேவகுமார், கொடியா (கொடிசியா அல்ல) செயலாளர் ஜெயக்குமார் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

