sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவையில் இருந்து கிசான் ரயில்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை

/

 கோவையில் இருந்து கிசான் ரயில்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை

 கோவையில் இருந்து கிசான் ரயில்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை

 கோவையில் இருந்து கிசான் ரயில்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை


ADDED : டிச 24, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சேலம் ரயில்வே கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு(டி.ஆர்.யு.சி.சி.,) கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், கோவையின் பல்வேறு ரயில்வே தேவைகளை நிறைவேற்ற விடுக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்:

n கோவை - மங்களூர்(22609/ 22610), எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677/ 12678), எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ்(16187/161880), மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் (16765/16766) ஆகிய ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்ல வேண்டும்.

n மதுரை - கோவை (16721/16722) ரயில் மேட்டுப்பாளையம் மற்றும் போடிநாயக்கனுார் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

n மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை இணைத்து கிசான் ரயில்களை இயக்க வேண்டும்; இதன் மூலம், விவசாயிகள் தங்களை விளை பொருட்களை சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் எடுத்து செல்ல முடியும்.

n ரயில் டிக்கெட் முன்பதிவின் போது 'நெட் பேங்கிங்' உரிய முறையில் செயல்படுவதில்லை. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

n எர்ணாகுளம் - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு, கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us