/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்கால கோவில் புனரமையுங்க! கொங்கலக்குறிச்சியில் எதிர்பார்ப்பு
/
பழங்கால கோவில் புனரமையுங்க! கொங்கலக்குறிச்சியில் எதிர்பார்ப்பு
பழங்கால கோவில் புனரமையுங்க! கொங்கலக்குறிச்சியில் எதிர்பார்ப்பு
பழங்கால கோவில் புனரமையுங்க! கொங்கலக்குறிச்சியில் எதிர்பார்ப்பு
ADDED : மார் 13, 2024 10:46 PM

உடுமலை- உடுமலை அருகே பழமை வாய்ந்த, கோவிலை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. சுமார், 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இக்கோவில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாகும்.
தளி பாளையக்காரர் எத்தலப்பரால், கோவில் பராமரிப்பு, திருவிழா மற்றும் இதர செலவினங்களுக்காக சுற்றுப்பகுதியில், நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், இக்கோவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படவில்லை.
இதனால், கோபுர கலசம் இல்லாமல், கற்களால் அமைக்கப்பட்ட சுவருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில், சுண்ணாம்பு பூச்சு மட்டும் செய்து வருகின்றனர். முன்கோபுரமும், விரிசல் விட்டு வலுவிழந்து வருகிறது.
பொலிவிழந்து வரும் இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என கொங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, தற்போது இக்கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய செல்லாண்டியம்மன் கோவில் புனரைமக்கப்படவில்லை. இதனால், பொலிவிழந்து வந்த கோவிலை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரித்து மட்டும் வருகிறோம். இந்தாண்டு, கோவிலை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்,' என்றனர்.

