/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'
/
'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'
ADDED : ஏப் 18, 2025 06:30 AM

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதிநிகேதன் பள்ளியில் 22வது புத்தக கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி முத்துசாமி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ''பள்ளிகளில் புத்தக கண்காட்சிகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதால், மொபைல்போன் அடிமை தனத்தில் இருந்து வெளியே வர முடியும். புத்தகங்களை படித்தால் அறிவாளியாகவும், ஒரு நல்ல மனிதனாகவும் ஆகலாம். மனித தன்மை தானாக வந்து சேரும். எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் சிற்பிகளாக மாணவர்கள் உருவாகுவார்கள், என்றார்.
இந்த நிகழ்வின் போது, பள்ளியின் செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

