/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜ்ய புரஷ்கார் தேர்வு முகாம் 170 சாரணர்கள் பங்கேற்பு
/
ராஜ்ய புரஷ்கார் தேர்வு முகாம் 170 சாரணர்கள் பங்கேற்பு
ராஜ்ய புரஷ்கார் தேர்வு முகாம் 170 சாரணர்கள் பங்கேற்பு
ராஜ்ய புரஷ்கார் தேர்வு முகாம் 170 சாரணர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 20, 2024 05:04 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ராஜ்ய புரஷ்கார் தேர்வுக்கான முகாம் நடந்தது.
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்தின் ராஜ்ய புரஷ்கார் தேர்வுக்கான முகாம், பொள்ளாச்சி ஆர். கோபாலபுரம் எம்.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 16ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை நடந்தது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலர் கனகராஜன் தலைமை வகித்தார். இம்முகாமில், 15 பள்ளிகளில் இருந்து, 170க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்களும், பயிற்சி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
சாரண பிரிவில் நிக்கோலஸ், முதன்மை தேர்வராகவும், சாரணிய பிரிவில், ரூத்பேபி, முதன்மை தேர்வராகவும் இருந்து முகாமினை நடத்தினர்.
இம்முகாம் நடத்த பள்ளியின் தாளாளர் மனோகரன், செயலர் விஜயலட்சுமி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர்.