/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசநோயாளிகள் நலனுக்காக புரோட்டீன் சத்து பெட்டகம்
/
காசநோயாளிகள் நலனுக்காக புரோட்டீன் சத்து பெட்டகம்
காசநோயாளிகள் நலனுக்காக புரோட்டீன் சத்து பெட்டகம்
காசநோயாளிகள் நலனுக்காக புரோட்டீன் சத்து பெட்டகம்
ADDED : டிச 22, 2025 05:07 AM
கோவை: மாவட்ட காசநோய் அலுவலகம் மற்றும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும் வகையில், கடந்த இரண்டு மாதங்களாக புரோட்டீன் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது.
காசநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். ஊட்டச்சத்து அதிகரிக்கும் வகையில் கடந்த, அக்., முதல் புரோட்டீன் பவுடர் பெட்டகம் வழங்கப்படுகிறது.
மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குனர் சக்திவேலிடம் கேட்டபோது, ''தன்னார்வ அமைப்புடன் இணைந்து, புரோட்டீன் பெட்டகம் கடந்த இரண்டு மாதங்களாக வழங்குகின்றோம். ஒருவருக்கு மாதம் இரண்டு பாக்ஸ் என்ற அளவில், ஆறு மாதங்களுக்கு, பதிவு செய்த அனைத்து காசநோயாளிகளுக்கும் வழங்கப்படும். இதனை வாங்க வரும் பொழுது, அவர்களின் எடை, உடல்நிலை பரிசோதித்து அறிவுரை வழங்குகிறோம்,'' என்றார்.

