/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
/
மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
ADDED : மார் 13, 2024 10:31 PM
உடுமலை, - கட்டப்பட்ட வீடு, கடை மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
உடுமலை மின்பகிர்மான வட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள், கடைகள் வணிக வளாகங்களுக்கு கடந்த மூன்று ஆண்டாக மின் இணைப்பு வழங்குவதில், பணி நிறைவு சான்று உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மேலும், மின்மீட்டர் பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை என, பல்வேறு காரணங்களை கூறி, நிரந்தர மின்இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இதனால், தற்காலிக மின் இணைப்பு பெற்று, அதே அடிப்படையில் கடைகள், வீடுகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் கடைகளை வாடகைக்கு விட முடியாமல், வங்கி கடன் செலுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்.
மின் இணைப்பு வழங்கப்படாத கட்டடங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தற்காலிக மின் இணைப்புகளை ரத்து செய்து நிரந்தர மின் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

