/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் முப்பெரும் விழா வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளியில் முப்பெரும் விழா வென்ற மாணவர்களுக்கு பரிசு
பள்ளியில் முப்பெரும் விழா வென்ற மாணவர்களுக்கு பரிசு
பள்ளியில் முப்பெரும் விழா வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : பிப் 08, 2024 10:01 PM

உடுமலை : பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
முன்னதாக, ஆசிரியர் சத்தியவாணி, வரவேற்றார். தொடர்ந்து, ஆசிரியர் முனியப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, உடுமலை அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மதியழகன் கலந்து கொண்டார். விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், நன்றி கூறினார்.

