/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 1,022 பேருக்கு பணி நியமன ஆணை
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 1,022 பேருக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 1,022 பேருக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 1,022 பேருக்கு பணி நியமன ஆணை
ADDED : டிச 14, 2025 05:06 AM

கோவை: மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், தனியார் துறை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு விதமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய, 245 நிறுவனங்கள் பங்கேற்றன.
ஆண்கள் 1,432, பெண்கள் 1,797 என, 3,229 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஆண்கள் 445 , பெண்கள் 577 என, மொத்தம் 1,022 பேர் பணி நியமனம் பெற்றனர். கலெக் டர் பவன்குமார் பணி நியமன ஆணை வழங்கினார்.
வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் கருணா கரன், மகளிர் திட்ட இணை இயக்குனர் மதுரா, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரி பொருளாளர் பரமசிவன், கல்லுாரி முதல்வர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்கள் 484, பெண்கள் 269 என மொத்தம் 753 பேர் இரண்டாம் கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்புக்கு 19 பேர், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு 6 பேர், திறன் பயிற்சிக்கு 35 பேர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக, வேலை வாய்ப்பு பெற 3 பேர் பதிவு செய்தனர்.
தன்னார்வ பயிலும் வட்ட சேர்க்கை, வேலை வாய்ப்பற்றோர் உதவித்திட்ட படிவங்கள், தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம் பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனை என, வேலை நாடுநர்களுக்கு விளக்கப்பட்டது.

