/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரங்களில் தனியார் விளம்பரம்; அத்துமீறலை தடுக்க வேண்டும்!
/
மரங்களில் தனியார் விளம்பரம்; அத்துமீறலை தடுக்க வேண்டும்!
மரங்களில் தனியார் விளம்பரம்; அத்துமீறலை தடுக்க வேண்டும்!
மரங்களில் தனியார் விளம்பரம்; அத்துமீறலை தடுக்க வேண்டும்!
ADDED : மார் 11, 2024 08:48 PM

குழி மூடப்படுமா?
பொள்ளாச்சி, இமான்கான் வீதியில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- -ரமேஷ், பொள்ளாச்சி.
பஸ் ஸ்டாண்டில் அவதி
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் பயணியர் அமரும் இருக்கை அருகே, அசுத்தமாகவும், காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பயணியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.
- -சஞ்சு, உடுமலை.
வேகத்தடை தேவை
கிணத்துக்கடவு, வடசித்துாரில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில், பல்லடம் இணைப்பு சாலையில் விபத்து அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த இணைப்பு சாலை அருகே கூடுதல் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -தம்பு, நெகமம்.
கால்வாயை துார்வாரணும்
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் பின்புறம், மழைநீர் வடிகால் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம், உடுமலை.
பணியை வேகப்படுத்தணும்
உடுமலை ராஜலட்சுமிநகர் நகராட்சி பூங்கா பணிகள் துவக்கப்பட்டு, மந்த கதியில் நடக்கிறது. இதனால், அப்பகுதியினர் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சியினர் பூங்கா பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
மரத்தில் விளம்பரங்கள்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் ஆச்சிபட்டியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வரை ரோட்டோரம் உள்ள மரங்களில் தனியார் விளம்பரங்கள் அதிகமாக உள்ளது. மரத்தில் ஆணி அடிப்பதாலும், கம்பி சுற்றி கட்டுவதாலும், மரத்தின் ஆரோக்கியம் பாதிக்கிறது. எனவே, விளம்பரங்களை மரத்தில் வைக்க தடை விதிக்க அந்தந்த ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
- -பெருமாள், பொள்ளாச்சி.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் குப்பைக்கழிவுகள் குடியிருப்பு பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. தெருநாய்கள் அவற்றை களைத்து பரப்பி விடுவதால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டுடன் உள்ளது. கழிவுகள் இருப்பதால் அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.
- மணிமேகலை, உடுமலை.
புதரை அகற்றணும்
உடுமலை ராஜலட்சுமி நகரில் ரோட்டோரம் புதர்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இப்புதரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
'குடி'மகன்கள் தொல்லை
உடுமலை, பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே 'குடி'மகன்கள் மது அருந்துவதற்கும் இளைப்பாறும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- சரண்ராஜ், உடுமலை.
கால்வாயில் பிளாஸ்டிக்
உடுமலை, கணக்கம்பாளையம் ஊராட்சி கிளை வாய்க்கால் கரைகளில், பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. கழிவுகள் தண்ணீரில் கலப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குப்பைகிடங்காக மாறி வருகிறது.
- ராம்குமார், கணக்கம்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை பசுபதி வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சண்டையிட்டு தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்துவதால் நிம்மதியில்லாமல் உள்ளனர். வாகன ஓட்டுநர்களை துரத்தி செல்வதால், பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது.
- வெங்கடேஷ், உடுமலை.
கழிவு நீர் தேக்கம்
பொள்ளாச்சி, வெங்கடாசலபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -முரளி கிருஷ்ணன், பொள்ளாச்சி.

