/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; பயணியர் மகிழ்ச்சி
/
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; பயணியர் மகிழ்ச்சி
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; பயணியர் மகிழ்ச்சி
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; பயணியர் மகிழ்ச்சி
ADDED : டிச 17, 2025 06:37 AM
- நமது நிருபர் -:
ரயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல, படுக்கை விரிப்பு, தலையணை, படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கும் புத்தாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
ஏ.சி. அல்லாத படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் புத்தாண்டு முதல் படுக்கை விரிப்பு, தலையணை வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2026 ஜன. 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வேயில் பத்து ரயில்களில் இத்திட்டம் அமலாக உள்ளது. இப்பட்டியலில், மேட்டுப்பாளையம் - கோவை (எண்:12671) நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - சென்னை (எண்:12695), ஆலப்புழா - சென்னை (எண்:22639), மங்களூரு - சென்னை எழும்பூர் (எண்:16159) திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் (எண்:12695) ஆகிய ஐந்து ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் வழியாக பயணிக்கும் ஐந்து ரயில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

