/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.பி.எஸ்., பிரசாரத்தில் பிக்பாக்கெட்: 6 பேர் கைது; ரூ.1.22 லட்சம் மீட்பு
/
இ.பி.எஸ்., பிரசாரத்தில் பிக்பாக்கெட்: 6 பேர் கைது; ரூ.1.22 லட்சம் மீட்பு
இ.பி.எஸ்., பிரசாரத்தில் பிக்பாக்கெட்: 6 பேர் கைது; ரூ.1.22 லட்சம் மீட்பு
இ.பி.எஸ்., பிரசாரத்தில் பிக்பாக்கெட்: 6 பேர் கைது; ரூ.1.22 லட்சம் மீட்பு
ADDED : ஜூலை 08, 2025 11:50 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரத்தின் போது 6 பேரிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்தது தொடர்பாக, 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், 49; தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணை தலைவர். நேற்று முன் தினம், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள அம்மையப்பன் மஹாலுக்கு வந்திருந்தார்.
அவரை காண கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது, தங்கராஜ் பேன்ட் பாக்கெட்டை பிளாடால் கிழித்து, ரூ. 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மேட்டுப்பாளையம் சுக்கு காபி கடையை சேர்ந்த செல்வராஜிடம் ரூ. 7,000, ஆனந்தனிடம் ரூ.40,000, சரவண குமாரிடம் ரூ.5,000, சுரேஷிடம் ரூ. 5,000, வீரபத்திரனிடம் ரூ.15,000 ஆகியோரிடமும், மர்ம நபர்கள் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், திருடியவர்கள் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜி, 40, டிரைவர், கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜா, 47, ஆட்டோ டிரைவர், ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், 38, ரமேஷ், 37, கூலி தொழிலாளிகள், தர்மபுரியை சேர்ந்த கோபால், 40, கூலி தொழிலாளி, திருச்சியை சேர்ந்த அருள்குமார், 57, சமையல் மாஸ்டர் ஆகியோர் என தெரிந்தது.
கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த இவர்களை, மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்து, ரூ.ஒரு லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மீட்டனர்.------