/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் வலம் வரும் மர்மநபர்கள் நடவடிக்கை கோரி மக்கள் மறியல்
/
இரவில் வலம் வரும் மர்மநபர்கள் நடவடிக்கை கோரி மக்கள் மறியல்
இரவில் வலம் வரும் மர்மநபர்கள் நடவடிக்கை கோரி மக்கள் மறியல்
இரவில் வலம் வரும் மர்மநபர்கள் நடவடிக்கை கோரி மக்கள் மறியல்
ADDED : மார் 13, 2024 11:49 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மர்மநபரை கைது செய்ய வேண்டும் என மரப்பேட்டை பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி மரப்பேட்டை வீதி பூங்கா அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி மர்மநபர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவ்விடத்தில் பொதுமக்களும் குவிந்து, அந்த நபரை தேடிய போது, தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், மர்ம நபர் யாரும் சிக்கவில்லை.
இந்நிலையில், இரவு நேரங்களில் நடமாடும் மர்ம நபரை பிடிக்க வேண்டும் என மரப்பேட்டை பகுதி மக்கள், பொள்ளாச்சி - உடுமலை ரோடு ரவுண்டானா அருகே மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'மரப்பேட்டை வீதியில் கடந்த இரண்டு நாட்களாக மர்மநபர் ஒருவர் நடமாட்டம் உள்ளது. தற்போது, குழந்தை கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும் சூழலில், அந்த நபர், தெருக்களில் விளையாடும் குழந்தைகளை கடத்த நோட்டமிட நடந்து வந்தாரா என சந்தேகம் உள்ளது.
மேலும், நகை பறிப்பு போன்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. மர்ம நபரை கைது செய்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கண்காணிப்பு செய்து மர்மநபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இரவு நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

