/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையை தவிர்க்கும் மக்கள்; ஆக்கிரமித்துள்ள செடியை அகற்றணும்
/
நடைபாதையை தவிர்க்கும் மக்கள்; ஆக்கிரமித்துள்ள செடியை அகற்றணும்
நடைபாதையை தவிர்க்கும் மக்கள்; ஆக்கிரமித்துள்ள செடியை அகற்றணும்
நடைபாதையை தவிர்க்கும் மக்கள்; ஆக்கிரமித்துள்ள செடியை அகற்றணும்
ADDED : ஜூலை 14, 2025 08:05 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள நடைபாதையை, மக்கள் தவிர்க்கின்றனர்.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் (பொள்ளாச்சி வழி) ஏராளமானோர் பயணிக்கின்றனர். இவ்வழியில் மக்கள் பலர் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது.
இதில், தற்போது அதிக அளவு செடிகள் முளைத்து நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால், (1கிலோ மீட்டர் வரை) இதை தவிர்த்து, மக்கள் பலர் ஆபத்தை உணராமல் சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
மேலும், இந்த சர்வீஸ் ரோடு ஒன்வே ஆக உள்ளது. ஆனால் இந்த ரோட்டை இரு வழி தடம் போல் உபயோகிக்கின்றனர். இதனால் ரோட்டோரம் நடந்து செல்லும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தாலுகா அலுவலக வளாகம் வந்து செல்ல, தற்காலிகமாக மண் ரோடு அமைக்கப்பட்டது.
தற்போது இந்த பாதையும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி இந்த நடைபாதையை ஆக்கிரமித்துள்ள செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.