/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் இல்லாததால் மக்கள் பரிதவிப்பு
/
குடிநீர் இல்லாததால் மக்கள் பரிதவிப்பு
ADDED : டிச 18, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; ஒட்டர்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது பைரவா கார்டன். இங்கும் அருகிலும் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள அன்னுார் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கார்டனில் போர்வெல் நீருக்கு பொருத்தப்பட்ட மின்மோட்டாரையும் கழட்டி சென்று விட்டனர். என்றனர்.

